10 ஆண்டுகளுக்கு பின் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி: பொதுமக்கள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் 10 ஆண்டுகளுக்கு பின் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணிகளால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2021-09-22 14:45 GMT

கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் நடைபெற்ற தூர்வாரும் பணி.

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட ஐந்து ரோடு ரவுண்டானா, பெங்களூர் சாலை, கே.தியேட்டர் சாலை, பழையபேட்டை காந்திசாலை ஆகிய பகுதிகளில் மழை பெய்தால், மழை நீர் மற்றும் கழிவுநீர் செல்ல வழியின்றி, இரண்டும் கலந்து சாலையில் ஓடியது. இவை வடிவதற்கு இரண்டு நாட்கள் ஆவதோடு, கடும் துர்நாற்றம் வீசும். இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

இதில் பழையபேட்டை பகுதியில் கழிவுநீர் கால்வாயை தூர்வாரி 5 ஆண்டுகளும், புதுப்பேட்டை பெங்களூர் சாலை, கே.தியேட்டர் சாலை பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயை தூர்வாரி 10 ஆண்டுகளும் ஆகிறது. இதனால் இப்பகுதியில் மழை பெய்தால், மழை நீருடன், கழிவுநீரும் சாலையில் சுமார் 2 அடி உயரத்திற்கு தேங்கி நிற்கும அவல நிலை இருந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவின்படி, கடந்த 3 நாட்களாக கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த பணியினை இன்று நகராட்சி ஆணையாளர் முருகேசன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஜெயக்குமார், உதவி பொறியாளர் அன்பரசன் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், கழிவுநீர் கால்வாயை தூர்வாரி 10 ஆண்டுகள் கடந்துள்ளதால், சிறிய அளவு மழை பெய்பணியினை சாலை சேறும், சகதியுமாக மாறிவிடும். இதனால் சாலையில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. தற்போது நகராட்சி பகுதி முழுவதும் கால்வாய் தூர்வாரப்படுவதால் மழைநீர் சீராக செல்வதோடு, கழிவுநீரும் சாலையில் தேங்குவது தவிர்க்கப்படும். இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துகொள்கிறோம் என்றனர்.

Tags:    

Similar News