கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவக்க பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று, துவக்க பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-12 02:45 GMT

கோப்பு படம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டது

இந்நிலையில், இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இன்று காலையிலும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக,  12.11.2021 இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,  1 ஆம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை உள்ள துவக்க பள்ளிகளுக்கு மட்டும்,  விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசந்திர பானு ரெட்டி அறிவித்துள்ளார்.

மேலும்,   உயர்நிலைப்பள்ளி,  மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News