ஊரக உள்ளாட்சி தேர்தல்: 22 பதவிகளுக்கு இதுவரை 30 பேர் மனு தாக்கல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 22 பதவிகளுக்கு நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இதுவரை 30 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Update: 2021-09-21 15:45 GMT

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேர்தல் வருகிற அக்டோபர் மாதம் 9ம் தேதி நடைபெறுகிறது. அதன்படி பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் வார்டு எண் 30 உறுப்பினர் பதவி ஒன்றுக்கும், நல்லூர், பின்னமங்கலம், கண்டகானப்பள்ளி ஊராட்சிகளின் தலைவர் பதவிக்கு, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் காலியாக உள்ள 18 பதவிகளுக்கு என மொத்தம் 22 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 15ம் தேதி துவங்கியது. இன்று வரை பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் வார்டு எண்.30க்கு ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. ஓசூர் ஒன்றியம் நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 5 பேரும், தளி ஒன்றியம் பின்னமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 4 பேரும், கெலமங்கலம் ஒன்றியம் கண்டகானப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 4 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இதே போல் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு இன்று வரை 17 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 18 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியில் 7 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. நாளை (22ம் தேதி) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News