நதிகளை இணைக்க ஸ்கூட்டர் பயணம்

நதிகளை தேசிய மயமாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 15 ஆயிரம் கிலோ மீட்டர் பாரத யாத்திரை ஸ்கூட்டர் பயணம் கிருஷ்ணகிரியில் தொடங்கியது .

Update: 2021-03-05 06:45 GMT

நதிகளை தேசிய மயமாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 15 ஆயிரம் கிலோ மீட்டர் பாரத யாத்திரை ஸ்கூட்டர் பயணம் கிருஷ்ணகிரியில் தொடங்கியது .

இந்திய நதிகள் இணைப்பு இயக்கம், ஸ்வார்டு  மற்றும் நியூ லைஃப் தொண்டு நிறுவனங்கள் சார்பில் நதிகளை தேசிய மயமாக்க வேண்டும் , தேசிய நதிகளை இணைக்க வேண்டும், தேசிய நீர்வழிச்சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் வாக்கர் சர்தார் மற்றும் முனிராஜிலு ஆகிய இருவரும் ஸ்கூட்டரில் பாரத யாத்ரா என்ற பயணத்தை தொடங்கி உள்ளனர். அவர்கள் டில்லி சென்று பிரதமர் மோடியை சந்திப்பார்கள் என்றும் தெரிகிறது.

 இந்த ஸ்கூட்டர் பயணம் கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றம் முன்பு தொடங்கியது. மாவட்ட நீதிபதி அறிவொளி மற்றும் சார்பு நீதிபதி தமிழ்ச்செல்வன் ஆகியோர் கொடியசைத்துபாரத யாத்திரை ஸ்கூட்டர் பயணத்தை துவக்கி வைத்தனர் . இந்த பாரத யாத்திரை ஸ்கூட்டர் பயணமானது,  150 நாட்கள், சுமார் 15,000 கிலோ மீட்டர் பயணிப்பார்கள்.

Tags:    

Similar News