குடியரசு தின விழா: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியேற்றினார்

நாட்டின் 73 வது குடியரசு தின கொடியினை கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி ஏற்றி வைத்தார்

Update: 2022-01-26 05:45 GMT

கிருஷ்ணகிரியில் நாட்டின் 73 வது குடியரசு தின கொடியினை மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரபானுரெட்டி ஏற்றி வைத்தார்

ஜெயசந்திரபானு ரெட்டி ஏற்றிவைத்து 

கிருஷ்ணகிரியில் நாட்டின் 73 வது குடியரசு தின கொடியினை மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி ஏற்றிவைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் 73 -வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. சுதந்திர இந்தியாவின் 73 -வது குடியரசு தின தேசியக்கொடியை மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் ஏற்பாடு செய்து இருந்த காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி, மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.

இதன் பின் நாட்டின் சாமதானம் ஓங்கிட வழியுறுத்தி சமாதானப் புறாக்களும் பறக்கவிடப்பட்டது.இதனை அடுத்து அரசுத்துறையில் சிறப்பாக பணி ஆற்றிய அரசு துறை அலுவலர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், 16 பயானாளிகளுக்கு 6 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார்.மேலும் கொரோனா பெரும் தொற்றுக் காரணமாக இந்த சுதந்திர தினவிழாவில் அனைத்து கலை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது.

Tags:    

Similar News