ரேஷன் கார்டில் திருத்தம் செய்யணுமா? இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

பொது விநியோகத் திட்டத்தின் கீழ், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-16 14:30 GMT

கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன்பெற, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான விண்ணப்பங்களை, இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம்-2013ன்படி, அனைத்து பொதுமக்களுக்கும் உணவு சென்றடைவதை உறுதி செய்வதே இச்சட்டத்தின் நோக்கமாகும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விவாகரத்து பெற்றவர்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில், புதிய மின்னனு குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News