தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறக்கிறார்

கிருஷ்ணகிரி உள்ளிட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை காணொளி மூலமாக நாளை மாலை 4 மணிக்கு திறந்து வைக்க உள்ளார்.

Update: 2022-01-11 14:22 GMT

பாரத பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் புதியதாக அமைக்க பட்டுள்ள கிருஷ்ணகிரி உள்ளிட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை காணொளி மூலமாக நாளை மாலை 4 மணிக்கு திறந்து வைக்க உள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டஅரசு மருத்துவக் கல்லூரி சுமார் 4 லட்சம் சதுர அடி பரப்பளவில் 339 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப் பட்டுள்ளது. இதில் 120 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவமனை, 114 கோடி ரூபாய் மதிப்பில் கல்லூரி, 105 கோடி ரூபாய் மதிப்பில் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதில் 700 படுக்கை வசதிகள் மற்றும் 14 அறுவை சிகிச்சை அரங்குகள், கல்லூரி கட்டிடம், கரையரங்கம், சவக்கிடங்கு, நோயாளிகள் சிகிச்சை கட்டடம், தங்கும் விடுதிகள், இதில் அமைக்க பட்டுள்ளது. 2,71,259.60 சதுர அடி பரப்பளவில் தரைதளம் மற்றும் 5 தளங்களுடன் கல்லூரி கட்டடம், 33,435.52 சதுர அடி பரப்பளவில் 1,000 பேர் அமரக் கூடிய கலையரங்க கட்டடம், கல்லூரியில் சிற்றுண்டியகம் , சமையல் கூடம், ஒரு மருத்துவமனைக் கட்டடம், 6 கல்லூரி கட்டடங்கள் , 12 குடியிருப்பு கட்டடங்கள் என மொத்தம் 19 கட்டடங்களுக்கான கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும் , 2,76,370.60 சதுர அடி பரப்பளவில் கல்லூரி முதல்வர் , மருத்துவ அலுவலர்கள் , மருத்துவர்கள் , மாணவ , மாணவியர் விடுதி , அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோருக்கான குடியிருப்பு கட்டடப் பணிகள் சிறப்பான முறையில் கட்டப்பட்டு பணிகள் முடிக்க பட்டுள்ளது.

Tags:    

Similar News