தபால் ஓட்டு வழங்குவதில் முறைகேடு : எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் ஓட்டு வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2021-03-06 03:45 GMT

சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் ஓட்டு வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர் வாக்கு சாவடிக்கு வந்து ஓட்டு போடுவது சிரமம் என்பதால் அவர்களுக்கு தபால் ஓட்டு வழங்க தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது.

அதற்கான படிவம் 12 D வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது .இந்த விண்ணப்பங்களை முறையாக உரிய அதிகாரிகளுடன் வாக்குச்சாவடி முகவர்களை வைத்து வழங்காமல், மாவட்ட நிர்வாகம் அதிமுகவினர் உதவியுடன் வழங்கி வருகிரார்கள்.ஆகவே, இந்த தேர்தலில் முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது என செங்குட்டுவன் எம்எல்ஏ குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து கலெக்டரிடம் புகார் தெரிவித்தார். பின்னர் அவர் கூறும்போது,

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 12 D படிவம் என்றால் என்ன என்று கூட தெரியாது. அப்படி இருக்கும் போது கட்டாயம் செய்து கையொப்பம் வாங்குகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தேர்தல் விதிமுறைக்கு முரணானது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர்களை வைத்து இந்த மனுக்களை வழங்க வேண்டும். வாக்காளர்களுக்கு இந்த பதிவை படித்து பார்ப்பதற்கு கூட நேரம் வழங்காமல் இவர்களே எழுதி கையொப்பம் வாங்கி கொண்டு வருகின்றனர்.

தேர்தல் விதிமுறைக்கு முரணான செயலை வன்மையாக கண்டிப்பதோடு இன்று வழங்கப்பட்ட அந்த படிவத்தை ரத்து செய்து அரசியல் கட்சிகளின் முகவர்களை வைத்து, தகவல் தெரிவித்து தான் இந்த பணியை ஆரம்பிக்க வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் வற்புறுத்தி கையொப்பம் வாங்குவது அவர்களது வாக்கு உரிமையை பறிக்கும் செயலாகும். இதே நிலை தொடருமானால் இந்த மாவட்டத்தில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றார்.


Tags:    

Similar News