கிருஷ்ணகிரியில் தற்காலிக மருத்துவர்கள் மீண்டும் பணி வழங்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

கிருஷ்ணகிரியில் கொரோனா கால தற்காலிக மருத்துவர்கள் மீண்டும் பணி வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் இடம் மனு அளித்தனர்.

Update: 2021-12-27 12:01 GMT

கிருஷ்ணகிரியில் கொரோனா கால தற்காலிக மருத்துவர்கள் மீண்டும் பணி வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் இடம் மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கொரோனா பேரிடர் சமயத்தில் பணியாற்றிய தற்காலிக மருத்துவர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் எனக் கோரி மனு அளித்தனர்.

அந்த மனுவில் கொரோனா பேரிடர் சமயத்தில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்காலிகமாக 52 மருத்துவர்கள் அரசால் நியமிக்கப்பட்டோம். தற்போது கொரோனா தொற்று குறைந்த காரணத்தால் 52 மருத்துவர்களும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

பணி இல்லாத காரணத்தால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம் ஆகவே எங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி சுகாதார துறை அமைச்சரைச் சந்தித்து மருத்துவக் குழு பேச்சு வார்த்தை நடத்தியது அப்போது மீண்டும் வழங்க முதல்வர் அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு உள்ளார் எனவும் விரைவில் பணி உத்தரவு வரும் எனவும் தெரிவித்தார்.

ஆனால் இது நாள் வரை எங்களுக்குப் பணி வழங்கப்படவில்லை. ஆகவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக எங்கள் மனுவைப் பரிசீலனை செய்து எங்களுக்குப் பணி வழங்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.

Tags:    

Similar News