கிருஷ்ணகிரி குடியரசு தின விழாவில் மலர்களை எடுத்துச்செல்ல அதிகாரிகள் போட்டபோட்டி

கிருஷ்ணகிரியில் நாட்டின் 73 வது குடியரசு தின விழாவில் அலங்கரிக்கப்பட்ட விதவிதமான மலர்களை போட்டபோட்டி போட்டு எடுத்து சென்ற அரசு அதிகாரிகள்

Update: 2022-01-27 02:50 GMT

கிருஷ்ணகிரியில் நாட்டின் 73 வது குடியரசு தின விழாவில் அலங்கரிக்கப்பட்ட விதவிதமான மலர்களை போட்டபோட்டி போட்டு எடுத்து சென்ற அரசு அதிகாரிகள்.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் 73 -வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. சுதந்திர இந்தியாவின் 73 -வது குடியரசு தின தேசியக்கொடியை மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

இந்த குடியரசு தின விழாவை முன்னிட்டு ஏராளமான விதவிதமான மலர்களால் அந்தப்பகுதி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிகழ்ச்சி முடிந்து மாவட்ட ஆட்சியர் விழா மேடையை விட்டு புறப்பட்டு சென்ற உடனேயே அங்குள்ள மலர்களை போட்டா போட்டி போட்டுக் கொண்டு அரசு அதிகாரிகள், வருவாய் துறையினர், காவல் துறையினர் உள்ளிட்ட உயர் பொறுப்பில் இருப்பவர்கள் அந்த மலர்களை அள்ளிச் சென்றனர். இதை பார்த்திருந்த சிறுவர்களும் பொதுமக்களும் அதேபோல முண்டியடித்துக்கொண்டு மலர்களை எடுத்து செல்வதில் ஆர்வம் காட்டினர்.

குடியரசு தினவிழா நிகழ்ச்சி முடிவடைந்து மாவட்ட ஆட்சியர் புறப்பட்ட உடனேயே இதுபோன்று உயர் அதிகாரிகளும் பொறுப்புள்ள அரசு அலுவலர்களும் இந்த செயலில் ஈடுபட்டது பார்ப்பவர்களை முகத்தை சுளிக்க வைத்தது.

Tags:    

Similar News