புரட்டாசி மாதத்தால் கிருஷ்ணகிரியில் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்

புரட்டாசி மாதம் காரணமாக, கிருஷ்ணகிரியில் பெரும்பாலான இறைச்சி கடைகள் இன்று வெறிச்சோடி காணப்பட்டன.

Update: 2021-09-19 06:30 GMT

கிருஷ்ணகிரியில், பொதுமக்களை எதிர்பார்த்து காத்திருந்த இறைச்சிக்கடை விற்பனையாளர்கள். 

புரட்டாசி மாதத்தில் இந்துக்கள் பலரும் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து, விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், இறைச்சி விற்பனை, முட்டை விற்பனை மந்தமாகிவிடுவது வழக்கம். 

கடந்த 17ம் தேதி புரட்டாசி மாதம் துவங்கியது. இதையடுத்து சந்தைகளில் ஆடு, கோழி விற்பனை சரியத் துவங்கி உள்ளது. கிருஷ்ணகிரியில் உள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில், ஞாயிற்றுக் கிழமையான இன்று கூட்டம் வெகுவாக குறைந்திருந்தது. பல கடைகளில் இறைச்சி வாங்க ஆட்கள் இன்றி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. புரட்டாசி முழுவதும் இதே நிலை இருக்கும் என்று வியாபாரிகள் கூறினர்.

Tags:    

Similar News