கிருஷ்ணகிரி மகளிர் கல்லூரி நேரடி சேர்க்கை: விண்ணப்பிக்க இன்று மாலை கடைசி

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில் மாணவியர் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று மாலை கடைசி என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-14 02:00 GMT

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரி.

இது குறித்து கல்லூரியின் முதல்வர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 2021-22ம் ஆண்டிற்கான இளங்கலை முதலாமாண்டு மாணவியர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டுள்ளது.

எனவே, முதலாமாண்டு மாணவியர் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்காத மாணவியர்கள் கல்லூரி அலுவலகத்தில் நேரடியாக இன்று மாலைக்குள் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

மதிப்பெண் பட்டியல்கள், சாதி சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ்கள் அசல் மற்றும் மூன்று நகல்கள், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3 கட்டாயம் எடுத்து வர வேண்டும். கல்லூரிக்கு செலுத்த வேணடிய கட்டணம் கலைப்பாடப்பிரிவிற்கு ரூ.2200ம், அறிவியல் பாடப்பிரிவிற்கு ரூ.2250ம் ஆகும். கலந்தாய்விற்கு வரும் மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும்.

இக்கல்லூரியில், தமிழ், ஆங்கிலம், பி.காம்., கணினி அறிவியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகள் 1 மற்றும் 2 என இரு சுழற்சி முறைகளிலும், வரலாறு, பொருளியல், வணிகவியல், இயற்பியல், உயிர்வேதியியல், வேதியியல், புள்ளியியல் ஆகிய பாடப்பிரிவுகளும் நடத்தப்படவுள்ளது. இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கல்லூரி முதல்வர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News