இன்னுயிர் காப்போம் திட்டத்தில் தாடை எலும்பு முறிந்தவருக்கு கிருஷ்ணகிரியில் சிகிச்சை

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் தாடை எலும்பு முறிந்தவருக்கு கிருஷ்ணகிரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Update: 2021-12-25 17:35 GMT

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் சிகிச்சை பெற்றுவரும் மாரியப்பன்.

கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி கிராமத்தைச்சேர்ந்தவர் மாரியப்பன் கூலி தொழிலாளியான இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தனது இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரியிலிருந்து திருவண்ணாமலை சாலையில் சென்றுள்ளார். அப்போது கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை மேம்பாலம் அருகே சென்ற போது எதிரில் வேகமாக வந்த இரு சகார வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மாரியப்பனை அருகிலிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பரிசோதனையில் அவருக்கு முகத்தில் உள்ள 14 எலும்புகளில் தாடையில் உள்ள எட்டு எலும்புகள், ஒன்பது பற்கள் உடைந்து ரத்தமும் அதிகமாக வெளியேறியது தெரிந்தது.

மாரியப்பனுக்கு தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் - 48 திட்டத்தின் கீழ் உடனடியாக தாடை எலும்புகளுக்கு நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவ குழுவினர் சிறப்பான சிகிச்சை அளித்தனர்.

மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் பயனுற்ற இரண்டாவது நபரான மாரியப்பனை, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்கள்.

Tags:    

Similar News