கிருஷ்ணகிரியில் கொரோனா நிலவரம் எப்படி?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியாகினர்; நேற்று ஒரே நாளில் 411 பேர், தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-06-04 01:55 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 411 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 883 பேர் குணமடைந்துள்ளனர். 5 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இது குறிட்து, தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 34 ஆயிரத்து 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 30 ஆயிரத்து 71 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 3 ஆயிரத்து 780 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 213 ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 48 வயது பெண், கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில், கடந்த 29ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அதேபோல 57 வயது ஆண், கொரோனா பாதிப்புடன் 24ம் தேதி கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கிருஷ்ணகிரியை சேர்ந்த 65 வயது முதியவர், கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் கடந்த 15ம் தேதி அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும், 60 வயது முதியவர் கொரோனா பாதிப்புடன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 10ம் தேதி அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்தார்.

அதேபோல்,  71 வயது முதியவர் கொரோனா பாதிப்புடன் ஓசூர் அரசு மருத்துவமனையில் கடந்த 29ம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் மூலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 213 ஆக உள்ளது.

#இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #கிருஷ்ணகிரி #கொரோனா #5பேர்பலி #411பேர்பாதிப்பு #கிருஷ்ணகிரி #corona #yesterday #5death #covid #coronaspread #covid-19 #stay home #staysafe

Tags:    

Similar News