போலீசாரின் தீவிர கண்காணிப்பால் வெறிச்சோடிய சாலைகள்

கிருஷ்ணகிரியில் போலீசாரின் தீவிர கண்காணிப்பால் வாகனங்கள், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

Update: 2021-05-31 05:00 GMT

கிருஷ்ணகிரியில் போலீசாரின் தீவிர கண்காணிப்பால் வாகனங்கள், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தளர்வு இல்லாத ஊரடங்கை பிறப்பித்து, அந்த ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. இது வருகிற 7ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணகிரியில் ஊரடங்கு உத்தரவை மீறி ஏராளமானோர் தேவையின்றி வாகனங்களில் சுற்றி வந்தனர். இதனை தடுக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக நேற்று முன்தினம் கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம் பகுதியில் போலீசார், அவ்வழியே காரணத்தோடு வந்தவர்களை மட்டும் அனுப்பி வைத்து, மற்றவர்களை நிறுத்தி, அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நேற்று மாவட்ட எஸ்பி பண்டிகங்காதர் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் தேவையின்றி சுற்றுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசார் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போலீசாரின் இந்த தீவிர நடவடிக்கையால் பெரும்பாலான சாலைகளில் வாகனங்கள், பொதுமக்கள் நடமாட்டம் பெரிதும் குறைந்து, அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது.

Tags:    

Similar News