காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு உடை அணியாமல் கொரோனா பரிசோதனை

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு உடை அணியாமல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் மருத்துவ ஊழியர்களால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2021-05-29 01:45 GMT

காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு உடை அணியாமல் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனை 

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் காவேரிப்பட்டணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தினமும் சுமார் 50க்கும் அதிகமானோர் கொரோனா பரிசோதனைசெய்து கொள்ள வந்து செல்கின்றனர்.

இங்கு கொரோனா பரிசோதனை செய்யும் மருத்துவ ஊழியர்கள், அரசு விதிகளை மீறி பாதுகாப்பு உடை அணியாமல் பொதுமக்களிடம் கொரோனா பரிசோதனை செய்கின்றனர். பாதுகாப்பு உடை அணியாமல் மருத்துவ ஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்வதால், கொரோனா பரிசோதனைக்கு வரும் பொதுமக்களில், யாருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால், அதன் மூலம் அனைவருக்கும் பரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News