ஊரக இளைஞர்களுக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி

கிருஷ்ணகிரி அடுத்த எலுமிச்சங்கிரியில் உள்ள வேளாண்மை அறிவியல் மையத்தில் ஊரக இளைஞர்களுக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி வழங்கப்பட்டது.

Update: 2021-04-29 07:45 GMT

எலுமிச்சங்கிரியில் உள்ள வேளாண்மை அறிவியல் மையத்தில் ஊரக இளைஞர்களுக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி 

கிருஷ்ணகிரி அடுத்த எலுமிச்சங்கிரியில் உள்ள ஐசிஏஆர் வேளாண்மை அறிவியல் மையமானது வேளாண்மைத்துறையின் மூலம் சமிதி மற்றும் மேனேஜ் ஆகிய நிறுவனங்களுடன் இணணந்து ஊரக இளைஞர்களுக்கு திறன் வளர்க்கும் பயிற்சியாக இயற்கை வேளாணமை என்ற தலைப்பில் 6 நாள் பயிற்சியினை 28 இளைஞர்களுக்கு நடத்தியது.

இப்பயிற்சியின் தமிழ்நாடு கிராம வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் பங்கேற்று, இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் மற்றும் பயன்படுகள் குறித்தும், மேலும் நஞ்சில்லா உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்து பயன்பெறுவது குறித்து பேசினார்.

மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ராஜேந்திரன், இயற்கை வேளாண்மை பயிற்சியில் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய தொழில் நுட்பங்களான பஞ்சகாவியம், அமிர்த கரைசல் பயன்பாடுகள் குறித்து பேசினார்.

வேளாண்மை அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான சுந்தர்ராஜ், இப்பயிற்சியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தொழில்நுட்பங்களான மண்புழு தயாரித்தல் மற்றும் பயன்பாடு, இயற்கை பூச்சி விரட்டி பயன்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார்.

உழவர் பயிற்சி மையத்தின் வேளாண்மை அலுவலர் பன்னீர்செல்வம், விவசாயிகளுக்கு கூட்டு பண்ணையத்தின் பயன்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.

இந்த பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பயிற்சி கையேடு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் பங்கேற்ற விவசாயி கருப்பண்ணன், இந்த பயிற்சியில் வழங்கப்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இயற்கை வேளாண்மை முறையில் சாகுபடி செய்ய உள்ளதாக கூறினார்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் (வேளாண் விரிவாக்கம்) செந்தில்குமார் செய்திருந்தார்.

Tags:    

Similar News