காலி படுக்கைகள் விவரம் அறிய உதவி எண்கள் : கலெக்டர் தகவல்

ஜெயசந்திரபானுரெட்டி

Update: 2021-05-10 09:15 GMT

 கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி

மருத்துவமனைகளில் காலியாக உள்ளபடுக்கைகள் விவரம் அறிய உதவி எண்கள் அறிவிப்பு கலெக்டர் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகள் குறித்த விவரங்களை தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை அறியலாம் என்று கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  கிருஷ்ணகிரி மாவடடத்தில் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுககை விவரம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தேவையான தகவல்கள் வழங்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் பொதுமக்கள் செல்போன் மற்றும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக சிறப்பு கட்டுப்பாட்டு அறை எண்கள் 04343 & 233021, 233022, 233023, 233024, 233025 மற்றும் செல்போன் எண் 9486589038 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News