ஹெல்மெட் கொள்ளையர்கள் அட்டகாசம்: பெண்ணிடம் 4 சவரன் நகைகள் கொள்ளை

கிருஷ்ணகிரி அருகே பெண்ணின் கழுத்திலிருந்து 4 சவரன் தங்க செயினை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

Update: 2021-09-10 12:45 GMT

பைல் படம்.

கிருஷ்ணகிரி அடுத்த கனகமுட்லு கிராமத்தைச் சேர்ந்தவர் மாதம்மாள். இவர் நேற்று மதியம் கிருஷ்ணகிரி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள மேல்சோமார் பேட் பகுதியில் உள்ள நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார்.

மேல்சோமார் பேட் நடு வீதி அருகே வந்துகொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இரண்டு பேர் மாதம்மாள் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து மாதம்மாள் கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் இன்று வழக்குப்பதிவு செய்து ஹெல்மெட் கொள்ளையர்களை தேடி வருகிறார்.

Tags:    

Similar News