கிருஷ்ணகிரியில் விநாயகர் சிலைகள் கே.ஆர்.பி.அணையில் கரைப்பு

கிருஷ்ணகிரியில் வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை இன்று கே.ஆர்.பி. அணையில் பொதுமக்கள் கரைத்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-12 14:00 GMT

 கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையின் பின் பகுதியில் இன்று காலை முதல் விநாயகர் சிலைகளை  கரைத்தனர்.

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 10ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அரசு தடைவிதித்திருந்தது.

இதனால் பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் கடைகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகைளை வைத்திருந்தனர். விநாயகர் சதுர்த்தி முடிந்து மூன்றாவது நாளான இன்று விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைத்தனர்.

கிருஷ்ணகிரி மற்றும் சுற்று வட்டாரங்களில் வீடுகளில் வைத்திருந்த சிறிய விநாயகர் சிலை மற்றும் 3 அடி வரையிலான விநாயகர் சிலைகளை கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையின் பின் பகுதியில் இன்று காலை முதல் கரைத்தனர்.

இதையொட்டி அணையின் பின்புறம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். ஒரு சிலையை கரைக்க ஒன்றிரண்டு பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

மேலும் இந்து முன்னணி சார்பில் 20க்கும் மேற்பட்ட சிலைகளை ஊர்வலம் இன்றி காரில் கொண்டு வந்து அணையில் கரைத்தனர். இன்று மாலை வரை 75க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன. 

Tags:    

Similar News