கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு: 1,200 போலீசார் பாதுகாப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள ஒரு நாள் ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-01-09 09:22 GMT

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி, நகரின் முக்கிய பகுதிகளில் சென்று ஊரடங்கு கட்டுப்பாடுகளை பார்வையிட்டார்.

உலகம் முழுவதும் கொரோனாவின் 3வது அலையான வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியாவிலும் ஓமிக்ரான் தொற்று கடந்த சில தினங்களாக வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து தமிழகத்திலும் ஓமிக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு அறிவித்திருந்தது. மேலும் வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு என அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொருத்த வரையில் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி நகரை பொருத்தவரையில் முக்கிய இடங்களான பேருந்து நிலையம், பெங்களூர் சாலை, ரவுண்டானா, பழையபேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும் மாவட்டம் முழுவதும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி, நகரின் முக்கிய பகுதிகளில் சென்று ஊரடங்கு கட்டுப்பாடுகளை பார்வையிட்டார்.

Tags:    

Similar News