முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்த நாள் விழா

கிருஷ்ணகிரியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் 76வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2021-09-16 14:30 GMT

காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற சிதம்பரத்தின் பிறந்தநாள் விழா.

கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் 76வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் ஏகம்பவாணன் தலைமை வகித்தார். இந்த விழாவின் போது, ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள வயதான பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இனிப்பு மற்றும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவர் டாக்டர் தகி, வட்டாரத் தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் நகர தலைவர் தளபதி ரகமதுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் அக.கிருஷ்ணமூர்த்தி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். முன்னதாக வட்டார துணைத் தலைவர் சக்கரவர்த்தி வரவேற்புரையாற்றினார். முடிவில் மாவட்ட பொதுச் செயலாளர் அசேல் நன்றி கூறினார். முன்னதாக காலை சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில், சிறப்பு பூஜையும், அர்ச்சனையும் நடைபெற்றது.

Tags:    

Similar News