கிருஷ்ணகிரி அணை உபரி நீரை ஏரிகளுக்கு திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

கிருஷ்ணகிரி அணையின் உபரி நீரை ஏரிகளுக்கு திறந்துவிட வேண்டும் என வாய்க்கால் பாசன சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2021-09-11 06:00 GMT

கிருஷ்ணகிரி அணை.

கிருஷ்ணகிரி அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை ஏரிகளுக்கு திறந்துவிட வேண்டும் என வாய்க்கால் பாசன சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கிருஷ்ணகிரி அண நீடிப்பு உபரிநீர் இடது வாய்க்கால் பாசன பயன்பெறுவோர் சங்கம் சார்பில், தர்மபுரி நீர்வள ஆதாரத்துறை செயயற்பொறியாளருக்கு இன்று கோரிக்கை மனு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அந்த மனுவில், தற்போது பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை வேகமாக நிரம்பி வருகிறது. எனவே அணையில் இருந்து ஆற்றில் உபரிநீர் திறப்பதற்கு முன், பாலேகுளி முதல் சந்தூர் வரை உள்ள 28 ஏரிகளுக்கு வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட்டு ஏரியை நிரப்ப வேண்டும்.

இன்னும் ஓரிரு நாளில் அணை நிரம்பி ஆற்றில் திறக்கப்படவுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட ஏரிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு போகும் அபாயம் உள்ளது. எனவே முதலில் 28 ஏரிகள் நிரம்ப வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News