கோழி இறைச்சி விற்பனைக்கு அனுமதி கேட்டு கோரிக்கை..!

கோழி இறைச்சியை வாகனங்களில் எடுத்து சென்று விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2021-06-05 07:36 GMT

தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் ( கோப்பு படம் ) 

கோழி இறைச்சியை வாகனங்களில் எடுத்து சென்று விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

கொரோனா பரவலை தடுக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் அனைத்து கடைகளும் மூடப்படும் என்ற அறிவித்து, பொதுமக்கள் பாதிக்க கூடாத வகையில் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது வரவேற்கத்தக்கது. ஆனால் அசைவ பிரியர்கள் குறிப்பாக கோழி இறைச்சி சாப்பிடுபவர்கள் இறைச்சி கிடைக்காமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், இறைச்சிக்காக வளர்க்கப்பட்ட கோழிகள் அனைத்தும் பண்ணையிலேயே இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கோழிப்பண்ணையாளர்கள் பெரும் இழப்பிற்கு உள்ளாகியுள்ளனர். எனவே, காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்களை எப்படி வாகனங்களில் அனுப்பி விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதோ, அதே போல் கோழி இறைச்சியையும் வாகனங்களில் எடுத்து சென்று, கொரோனா தடுப்பு விதிமுறைக்குட்பட்டு விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் ராமகவுண்டர் தெரிவித்துள்ளார்.

#இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #கிருஷ்ணகிரி #கோழிஇறைச்சி #வாகனம் #விற்பனை #விவசாயிகள் #சங்கம் #கோரிக்கை #farmers #chicken #vehichal #demand #request #goverment #sellers

Tags:    

Similar News