துரியோதனன் படுகளம் விழாவில் துடப்பத்தால் அடி வாங்கி நேர்த்தி கடன்

கிருஷ்ணகிரி அருகே நடந்த துரியோதனன் படுகளம் விழாவில் பொதுமக்கள் துடப்பத்தால் அடி வாங்கி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

Update: 2021-04-27 07:15 GMT

கிருஷ்ணகிரி அருகே உள்ள கூலியம் ஊராட்சிக்க உட்பட்ட சவுளூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள திரௌபதி அம்மன் கோவிலில் மகாபாரத திருவிழா நடைபெற்றது.அம்மனேரி, ஒம்பலகக்கட்டு, சவுளூர் ஆகிய கிராம மக்கள் ஒன்று கூடி நடத்தும். இந்த திருவிழா கடந்த 4ம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

கிருஷ்ணன் பிறப்புடன் துவங்கிய இந்த மகாபாரத இதிகாச திருவிழாவின் போது, அம்மன், பாஞ்சாலி தேவி திருகல்யாணம், பாண்டவர் பிறப்பு, பாண்டவர் அரக்கு மாளிகை, அர்ச்சுனன் தபசு, சுபத்திரை திருக்கல்யாணம், கண்ணன் தூது, அரவான் கடபலி, அபிமன்னன் சண்டை உள்ளிட்ட பல்வேறு இதிகாச நிகழ்ச்சிகள் திருப்பதி நாடகாசபையின் சார்பில் நடந்து வந்தது.

கடந்த 20 நாள்களாக நடைப்பெற்று வந்த இந்த மகாபாரத இதிகாச திருவிழாவின் கடைசி நாளான இன்று துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகு விமர்ச்சியாக நடைப்பெற்றது. இதில் களிமண்ணால் மிகப் பெரிய அளவில் உருவாக்கப்பட்ட தூரியோதனின் உருவத்தினை விமன் வதம் செய்யும் நிகழ்வு நடைப்பெற்றது,

அதன் பின் இந்த நிகழ்ச்சியை காண கூடியிருந்துத மக்கள் கூட்டத்தில், திரௌபதி பாஞ்சாலி தனது கூந்தலை முடிச்சிப் போட்டு தனது சபதத்தினை நிறைவேற்றிதை அடுத்து கிராம மக்கள் பஞ்ச பாண்டவர்களின் சிலையை தூக்கியபடி ஆடி ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் துடப்பத்தினால் தலையில் அடி வாங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள், இந்த மகாபாரத திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அம்மனேரி, ஒப்பலக்கட்டு, சவுளுர் ஆகிய மூன்று கிராமங்களை சேர்த்த கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News