நகை கடன் தள்ளுபடி நாள் வரை வட்டி வழங்க கோரி பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

நகை கடன் தள்ளுபடி திட்டத்தில் தள்ளுபடி நாள் வரை வட்டி வழங்க கோரி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-21 04:16 GMT

பைல் படம்.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தனபால் தலைமை வகித்தார் செயலாளர் செந்தில் பொருளாளர் ராஜதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மத்திய கூட்டுறவு வங்கியில் பொதுமக்களின் வைப்பு தொகையில் இருந்து கடன் பெற்று நகை கடன் வழங்கி வரும் பட்சத்தில் தமிழக அரசின் நகை கடன் தள்ளுபடி திட்டத்தில் நவம்பர் மாதம் வரை வட்டி வழங்கப்படும் என அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தொடக்க கூட்டுறவு வங்கிகள் பெரும் இழப்பை சந்திக்கும் எனவே அரசு தள்ளுபடி நாள் வரை வட்டி வழங்க வேண்டும்,விவசாயிகள் பயிர் கடன் வழங்குவது குறித்து மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகம் தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு தன்னிச்சையாக குறியீடு நிர்ணயம் செய்து நிர்ப்பந்தம் செய்வதையும் தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதை கண்டித்தும், தமிழக அரசின் சிறப்பு பொங்கல் தொகுப்பை நியாய விலைக் கடைகள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது இவற்றில் பொருட்கள் மொத்தமாக வழங்கும் போது சில இடங்களில் எடை குறைவு ஏற்படுவதால் அரசு தனித்தனியாக பொருட்களை பேக்கிங் செய்து வழங்க வேண்டும் என்பன 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களை எழுப்பினர் .

Tags:    

Similar News