ஊரடங்கால் காவேரி பட்டணம் தட்டு வடை உற்பத்தி பாதிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் கொரோனா ஊரடங்கால் நிப்பட் எனப்படும் தட்டு அடை உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-05-14 17:00 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் நகரை குட்டி சிவகாசி என்பார்கள்.  இந்த நகரில் தீப்பெட்டி தொழிற்சாலை, பால்கோவா தயாரிப்பு, நிப்பட் (தட்டு வடை) தயாரிப்பு புகழ் வாய்ந்த சிறு நகரமாகும். இங்கு தயார் செய்யப்படும் தட்டு வடை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வடமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பின்னர் நிப்பட் விற்பனை சரிந்ததுடன், வேலையாட்டுகளும் பாதியாக குறைந்துவிட்டனர்.

இது குறித்து காவேரிப்பட்டணத்தில் நிப்பட் தொழிற்சாலை நடத்தி வரும் ரவி என்பவர் கூறுகையில், காவேரிப்பட்டணத்தில் தட்டு வடை  தொழிலில்  ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். விறகு, தேங்காய் மட்டைகளை கொண்டு அடுப்பெரித்து, இயந்திரங்கள் இல்லாமல் செய்வதால் பெரிய அளவில் தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திராவில் இருந்து ஆர்டர்கள் கிடைத்து வந்தன.

கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல் தட்டு வடை வியாபாரம் சரிவுக்கு வந்தது. இதனால் தொழிற்சாலைகளில் வேலை பார்த்தவர்களில் பாதிபேர் வேறு வேலைக்கு சென்றுவிட்டனர். மீதமுள்ள ஆட்களை வைத்து நிப்பட் தயார் செய்யப்பட்டு, வாகனங்களில் வெளியூர்களுக்கு அனுப்படும் சரக்குகளும் கடைகள் பெரும்பாலும் முடியே இருப்பபதாலும், விற்பதற்கு காலதாமதம் ஏற்படுவாலும், அடுத்த லோடு அனுப்ப நாங்கள் காத்து கிடக்கிறோம். இதனால் பொருள் இழப்பு, ஆட்கள் கூலி என அனைத்தும் பெரும் சுமையாக உள்ளது. எனவே, எங்களை போல் நலிவுற்ற சிறுகுறு தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அரசு சிறப்பு கடனுதவி திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்று வேதனையுடன் கூறினார்.

Tags:    

Similar News