தனியார் தொழிற்சாலைகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம்

ஊடரங்கின் போது தனியார் தொழிற்சாலைகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

Update: 2021-04-22 06:15 GMT

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கொரோனா நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக, ஊரடங்கின் போது தனியார் தொழிற்சாலைகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார் .

அப்போது அவர் பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. பொது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால், பல்வேறு தளர்வுகளுடன், சில புதிய கட்டுப்பாடுகளுடன் வரும், 30ம் தேதி நள்ளிரவு, 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து தடையின்றி செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முழு ஊரடங்கின் போதும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது சுழற்சி முறையில் பணிக்கு வந்து செல்ல ஏதுவாக பணியாளர்களுக்கு உரிய அடையாள அட்டை அந்தந்த நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

தொழிற்சாலைகளில் கொரோனா நோய்த் தொற்று தொடர்பான தமிழ்நாடு அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளான, தொழிற்சாலை நுழைவு வாயில்களில் கை கழுவும் வசதி, கிருமி நாசினிகள் தெளித்தல், பணியாளர்கள் முககவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியினை பின்பற்றுதல் ஆகியவற்றினை உறுதிபடுத்த வேண்டும். மேலும், தொழிற்சாலை நிறுவனங்களின் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுடன் தொடர்பு கொண்டு தடுப்பூசிகளின் இருப்புநிலை அறிந்து தங்களது பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வகையில் முகாம்கள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News