கிருஷ்ணகிரி அருகே எருது விடும் விழா: 400 காளைகள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி அருகே 54ம் ஆண்டு எருது விடும் விழாவில் 400 காளைகள் பங்கேற்றன. 10க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர்.

Update: 2022-02-02 09:23 GMT

வரட்டனப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற 54வது ஆண்டு எருது விடும் விழா.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான எருது விடும் விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த எருது விடும் விழாவில் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான காளைகள் பங்கேற்று பரிசுகளை பெற்று வருகிறது.

அந்த வகையில் இன்று, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஆந்திரா மாநில எல்லையோரம் உள்ள வரட்டனப்பள்ளி கிராமத்தில் 54வது ஆண்டு எருது விடும் விழா நடைபெற்றது. இந்த எருது விடும் விழாவில் கிருஷ்ணகிரி, பர்கூர், ராயக்கோட்டை, மொரப்பூர், வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்டணம் மற்றும் திருப்பத்தூர், வேலூர், ஆலங்காயம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய இடங்களில் இருந்து சுமார் 400 காளைகள் பங்கேற்றது.

ஒவ்வொரு காளைகளாக வாடி வாசலில் இருந்து ஒட விடப்பட்டது. சீறிப்பாய்ந்த காளைகள் இலக்கை நோக்கி மின்னல் வேகத்தில் ஒடியது. குறைந்த வினாடியில் 125 மீட்டர் ஒடி இலக்கை எட்டும் காளைக்கு முதல் பரிசாக 70 ஆயிரத்து 770 ரூபாய் வழங்கப்பட்டது. அடுத்தடுத்து பரிசாக 50 காளைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறை படி, வாடி வாசல் இருந்து ஒடும் வகையில் 12 அடிக்கு இடையை இருபுறமும் அரண்கள் அமைக்கப்பட்டு கால்நடை மருத்துவர்கள் மூலம் காளைகள் பரிசோதனை செய்யப்பட்டு ஒட விடப்பட்டது. காளைகள் மூட்டியதில் 10க்கும் மேற்பட்டவர்கள் லேசான காயம் அடைந்தனர்.

பிரமாண்டமாக நடைபெற்ற இந்த எருது விடும் விழாவை காண கிருஷ்ணகிரி, பர்கூர், ஆந்திரா மாநிலம் குப்பம் ஆகிய இடங்களில் இருந்து சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்து கண்டு மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News