குளிர்பானம் குடித்த இருவர் ரத்தவாந்தி: கிருஷ்ணகிரி ஆலையில் அதிகாரிகள் சோதனை

திருவள்ளூர் அருகே குளிர்பானங்கள் குடித்த இருவர் ரத்தவாந்தி எடுத்ததால், கிருஷ்ணகிரி ஆலையில் உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

Update: 2021-09-21 15:45 GMT

காவேரிப்பட்டணம் அடுத்த சப்பானிப்பட்டியில் உள்ள குளிர்பான ஆலையில் சோதனையிடும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள். 

திருவள்ளூர் அருகே கடையில் குளிர்பானங்கள் குடித்த இருவர் நேற்று முன்தினம் திடீரென ரத்தவாந்தி எடுத்ததுடன் மயங்கி விழுந்தனர். அவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தநிலையில், குளிர்பானம் தயாரிக்கும் இடம் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த சப்பானிப்பட்டி என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்கடஷ் தலைமையில் நாகேந்திரன், சுரேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் இன்று குளிர்பானம் தயாரிக்கும் ஆலையில் சோதனை செய்தனர். சோதனையில் ஆலையில் தயாரிக்கப்படும் மூன்று வகையான குளிர்பான பாட்டில்களையும் சேகரித்து சென்னை, கிண்டியில் உள்ள அரசு பகுப்பாய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறும்போது, கிருஷ்ணகிரி மாவட்டம், சப்பானிப்பட்டி அருகே குளிர்பான தயாரிப்பு ஆலை, மற்றும் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள இவர்களது குளிர்பான கம்பெனி மற்றும் அங்கிருந்து அனுப்பப்பட்ட திருவள்ளூர் சுற்று வட்டார பகுதிகளிலும் சோதனை நடந்து வருகிறது.

அப்பகுதிகள் அனைத்திலும் குளிர்பானங்கள் சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தி முடிவுகள் வரும் வரை குளிர்பான ஆலையில் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

Tags:    

Similar News