கோமாரி நோய் தடுப்பு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு

Update: 2021-04-02 05:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பையூரில் கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோய் தடுப்பு மேலாண்மை குறித்து வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், வாழவச்சனூர் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தங்கி, ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு மேலாண்மை, அதன் அறிகுறிகள், தடுப்பூசி போடுதலின் முக்கியத்துவம் குறித்து பையூரில் உள்ள கால்நடை உரிமையாளர்களுக்கு பயிற்சி அளித்தனர்.அப்போது அவர்கள் கால்நடை உரிமை யாளர்களிடையே பேசுகையில், இது ஒரு வைரசால் உணடாக்கப்படும் நோய். வாய்ப்புண், வாயில் உமீழ்நீர் வெளியேறியபடி காணப்படுதல், காய்ச்சல், பால்மடி மற்றும் காம்புகளில் நீர்க்கோர்ப்பு, பாதத்தில் நீர்க்கொப்பளங்கள் வெடித்து புண்ணாக மாறுதல், போன்றவை கோமாரி நோயின் அறிகுறிகளாகும்.

இதை தடுக்க, புதிய கால்நடைகள் தவிர்ப்பு, நோய் பாதித்த கறவை மாடு பால் கொடுப்பதை தவிர்த்தல், வேப்ப எண்ணெயை கால் கொளம்புகளில் போட்டு விடுதல், பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கொண்டு வாய்ப்புண்களை சுத்தம் செய்தல், வாய்ப்புண்களில் புழு வருவதை தவிர்க்க கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல், உள்ளிட்டவை குறித்து அவர்கள் விளக்கம் அளித்தனர். இதில் கால்நடை உரிமையாளர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

Tags:    

Similar News