கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இளைஞர் தீக்குளிக்க முயற்சி

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்க முயற்சி செய்த இளைஞரை போலீஸார் காப்பாற்றினர்

Update: 2022-01-03 12:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இளைஞர் தீக்குளிக்க முயற்சித்த இளைஞரை மீட்ட  போலீஸார்

அரசு பணி வாங்கி தருவதாக கூறி 7.5 லட்சம் பணத்தை ஏமாற்றி விட்டதாக அரசு பள்ளி ஆசிரியை உள்ளிட்ட இருவர் மீது புகார் கூறி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இளைஞர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஜெயச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் இன்று நடைபெற்றது. அப்போது 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை திடீரென தன் உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீப்பற்ற வைக்க முயற்சி செய்தார் இதனை கண்ட காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீர் ஊற்றி அவரை  மீட்டு விசாரித்தனர்

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் கிருஷ்ணகிரி அருகே உள்ள சிகப்பு அடுத்த உப்பு குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தசரதன் இவர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கிருஷ்ணகிரி அடுத்த மாதேப்பட்டி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் ஜெயலட்சுமி மற்றும் சென்னை பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் முருகபாபு ஆகிய இருவரும் அரசு வேலை வாங்கித் தருவதாக தெரிவித்ததாகவும், இதனை நம்பிய இளைஞர் தசரதன் தான் வைத்திருந்த சிறு நிலம் மற்றும் வீடு ஆகியவற்றை விற்று ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை கொடுத்தாராம்.

ஆனால் இதுவரை இருவரும் சேர்ந்து தனக்கு அரசு பணி வாங்கி தரவில்லை எனவும் மேலும் ஃபுட் கார்ப்பரேஷன் இந்தியா நிறுவனத்தில் பணி கிடைத்துள்ளதாக போலியான நியமன ஆணையை இவரிடம் கொடுத்து ஏமாற்றி விட்டதாகவும்,மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான இளைஞர் தசரதன் இன்று மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து தற்கொலை முயற்சி செய்ததாக கூறினார்.

காவல்துறையினர் அவரை சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரன்பானுரெட்டியிடம் ஆஜர்படுத்தினர். மாவட்ட ஆட்சியர் மனுவை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணையிட்டு இளைஞர் தசரதனை ஏமாற்றிய இருவர் மீதும் விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க படியாகவும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இளைஞர் தற்கொலை முயற்சி செய்து கொண்ட சம்பவம் மாவட்ட ஆட்சியரகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News