அதிகவிலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து: வேளாண்மை இணை இயக்குநர்

கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் வேளாண்மை இணை இயக்குநர் எச்சரித்துள்ளார்.

Update: 2021-07-16 02:17 GMT

இது குறித்து, வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காரீப் பருவ சாகுபடி தொடங்கியுள்ள நிலையில் யூரியா 4009 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 2324 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1421 மெட்ரிக் டன் மற்றும் காம்பளக்ஸ் 6971 மெட்ரிக் டன் ஆகிய முக்கியமான உரங்கள் போதுமான அளவு தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளனது.

உரங்கள் அட்டவணையில் தெரிவித்துள்ளவாறு அரசு நிர்ணயம் செய்துள்ள விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் உர விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். விவசாயிகள் உரம் வாங்கச் செல்லும் போது, அவசியம் ஆதார் அட்டையை எடுத்துச்செல்ல வேண்டும். விவசாயிகள் வாங்கிய உரங்களுக்கு உரிய ரசீது கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

உரம் விற்பனையாளர்கள் உரம் வாங்கும் விவசாயிகளுக்கு ஆதார் எண் மூலம் விற்பனை முனைள கருவியில் பதிவு செய்து, சாகுபடி பரப்பிற்கு தேவையான உரங்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். உரம் விற்பனை நிலையங்களில் இருப்பு மற்றம் விலை விபரங்கள் அடங்கிய தகவல் பலகை விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் தினசரி பதிவு செய்ய வேண்டும்.

விற்பனை முனைய கருவியின் இருப்பும், கடையின் இருப்பும் நேர் செய்து பதிவேடுகள் முறையாக பராமரிக்க வேண்டும். மொத்த விற்பனையாளர்கள், வேறு மாவட்ட சில்லரை விற்பனையாளர்களுக்கு உரம் மாறுதல் செய்யக்கூடாது. ஆய்வின் போது குறைபாடுகள் கண்டறியப்பட்டால், உரக்கட்டுப்பாட்டுச் சட்டம் 1985ன் படி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News