கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 722 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்: பொதுமக்கள் ஆர்வம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13வது மெகா தடுப்பூசி முகாம் 722 இடங்களில் நடைபெற்றது.

Update: 2021-12-04 11:01 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13வது மெகா தடுப்பூசி முகாம் 722 இடங்களில் நடைபெற்றது. தடுப்பூசி போடாதாவர்கள் பொது இடங்களுக்கு செல்ல ஆட்சியர் தடை விதித்த நிலையில் ஏராளமான மக்கள் தடுப்பூசி செலுத்திகொள்ள ஆர்வம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பள்ளிகள் என 722 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. பெங்களூரில் ஒமிக்ரான் தொற்றால் இரண்டு பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அருகில் உள்ள மாவட்டமான கிருஷ்ணகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தாத 4.20 லட்சம் பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி அறிவித்தார். இதனை அடுத்து தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்கள் தற்போது தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் நூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்த நிலையில் மெகா தடுப்பூசி முகாமில் பதிவு செய்ய ஒரு கணினி மட்டும் வழங்கப்பட்டதால் பொதுமக்கள் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும் முதியவர்களுக்கு தனியாக வரிசை அமைக்கப்படாததால் பொது வரிசையில் நீண்ட நேரம் கந்திருந்து அவதிக்குள்ளாகினர்.

Tags:    

Similar News