ஜெயலலிதா உயிரிழப்புக்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி : ஸ்டாலின்

திமுக ஆட்சி 4 மாதத்தில் வந்துவிடும், முதல் வேலை ஜெயலலிதா உயிரிழப்புக்கு காரணமான குற்றவாளியை சட்டரீதியாக தண்டனை பெற்றுத் தருவதுதான், என கரூரில் மு.க. ஸ்டாலின் பேசினார்.

Update: 2021-01-04 09:32 GMT

கரூரில் நடைபெற்ற நடைபெற்ற திமுக மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது :

ஒரு கல்லில் இரண்டு மாங்காயை எம்எல்ஏ செந்தில்பாலாஜி அடித்துள்ளார். மக்கள் சபை கூட்டம், மகளிர் மாநாடு இரண்டையும் நடத்தியுள்ளார்.

1.1 சதவீத வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். அரசியல் ரீதியாக ஜெயலலிதா எப்போதும் எதிரிதான் ஜெயலலிதா உயிரிழந்தவுடன் கலைஞர் என்னை அழைத்து மரியாதை செய்துவிட்டு வரக் கூறினார்.

ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரணை கமிசன் 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இறப்பு குறித்து ஒரு துளியளவு கூட வெளி வரவில்லை.

ஓபிஎஸ்க்கு 8 முறை சம்மன் அனுப்பியும். விசாரணை கமிசனில் அவர் ஆஜராகவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விசாரணை நடத்தி ஜெயலலிதா உயிரிழப்பு குற்றவாளியை கண்டுபிடித்து நிறுத்தி சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதுதான் முதல் வேலை என ஸ்டாலின் பேசினார்.

Tags:    

Similar News