குமரியில் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டம்

ஹரியும் சிவனும் ஒன்று என்பதை எடுத்துரைக்கும் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டம்.

Update: 2021-03-10 15:00 GMT

ஹரியும், சிவனும் ஒன்று என்பதை விளக்கும் வகையில் சிவாலய ஓட்டம் நடைபெறுகிறது. மனித தலையும், புலி உடலும் கொண்ட புருஷா மிருகம், சிவன் மீது அன்பு நிறைந்தது.

சிவனைத் தவிர வேறு இறைவனை ஏற்கமாட்டேன் என புருஷாமிருகம், பிடிவாதமாக இருந்தது. ஹரியும், ஹரனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்த பகவான் கிருஷ்ணன் விரும்பினார். பீமனிடம் 12 ருத்ராட்சங்களை கொடுத்து கோவிந்த நாமத்தை உச்சரித்தபடி சென்று புருஷா மிருகத்திடம் பால் கேட்குமாறும், கோவிந்த நாமத்தை கேட்டதும் புருஷா மிருகம் தாக்க வரும்.

அப்போது ஒவ்வொரு ருத்ராட்சமாக கீழே போடு, அது லிங்கமாக மாறும். சிவபக்தரான புருஷாமிருகம் அதை வழிபாடு செய்து தான் அங்கிருந்து விலகும். இவ்வாறு 11 ருத்ராட்சம் முடிந்து 12வது ருத்ராட்சம் விழும் இடத்தில் நானும் சிவனும் இணைந்து காட்சியளிப்போம் என்று கூறினார்.

பீமனம் அவ்வாறே செய்தான். ருத்ராட்சம் விழுந்த இடங்களில் சிவாலயங்கள் உருவாகின. கடைசி ருத்ராட்சம் விழுந்த இடமான திருநட்டாலத்தில் ஹரியும் ஹரனும் இணைந்த சங்கர நாராயணராக மகாவிஷ்ணு காட்சி தந்து சிவனும் விஷ்ணுவும் ஒன்றே என உணர்த்தினார். இச்சம்பவம் நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களுக்கும் பக்தர்கள் ஓடி சென்று வழிபாடு நடத்துவார்கள், சிவனும் விஷ்ணுவும் ஒன்று அகந்தை கூடாது என்பதை உணர்த்தும் விதத்தில் இந்த சிவாலய ஓட்டம் நடைபெறுகிறது.

Tags:    

Similar News