வாகன சோதனை: காவல் கண்காணிப்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளம் பெண்

குமரியில் வாகன சோதனையில் போது காவல் கண்காணிப்பாளர் என தெரியாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-04-25 08:32 GMT

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தலை கவசம் குறித்த வாகன சோதனை நடைபெற்று வருகிறது. நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஹெல்மெட் சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வரும் நபர்களை தடுத்து நிறுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத் அறிவுரை வழங்கினார். மேலும் ஆவணங்கள் இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு வாலிபருடன் ஒரு இளம்பெண் பைக்கில் வந்தார், அப்போது அந்த இளைஞர் தலைக்கவசம் அணியவில்லை என்பதால் போலீசார் தடுத்து நிறுத்தி பைக் ஓட்டி வந்த இளைஞரிடம் ஹெல்மெட் ஏன் அணியவில்லை பைக்கில் நம்பர் பிளேட் இல்லையா என கேட்டார்.

அப்போது பைக்கில் இளைஞருடன் வந்த இளம்பெண் எஸ்.பி என்று அறியாமல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார், சுமார் 5 நிமிடங்கள் அந்த இளம் பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அதிகமானோர் பைக்கில் ஹெல்மெட் போடாமல் செல்கின்றனர். அவர்களை எல்லாம் நீங்கள் தடுக்கவில்லை என்றெல்லாம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அந்த இளம்பெண்.

ஆனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்டிப்பாக ஹெல்மெட் அணியாமல் யார் வந்தாலும் தடுத்து நிறுத்தப்படும் மற்றவர்கள் செல்வது செல்லட்டும் நீங்கள் ஏன் போடாமல் வந்தீர்கள் என பெண்ணிடம் கண்டிப்புடன் பேசினார்.

மேலும் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் ஆவணங்களை கேட்டார், ஆனால் அவர்களிடம் இல்லை உடனே அந்த பைக்கிற்கு அபராதம் விதித்து இளம்பெண்ணிற்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News