அமமுக மாவட்ட செயலாளர் மீது அக்கட்சியை சேர்ந்த பெண்கள் பண மோசடி புகார்

கட்சியில் பதவி வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக காவல்துறையில் புகார் அளிக்கும் அமமுக கட்சியை சேர்ந்த பெண்கள்.

Update: 2022-01-22 07:04 GMT

கன்னியாகுமரி மாவட்ட, அமமுக கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் உடையப்பன் குடியிருப்பை சேர்ந்த ராகவன். அதே கட்சியில் இளம்பெண்கள் பாசறை நிர்வாகியாக இருப்பவர் இறச்சகுளம் பகுதியை சேர்ந்த ராணி.

இந்நிலையில் கிழக்கு மாவட்ட செயலாளர் ராகவன் அமமுக கட்சியில் மாநில அளவில் உயர் பதவி வாங்கி தருவதாக கூறி சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் பணம் வாங்கி ஏமாற்றியதாக கூறினார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராணி சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதே போன்று 50 வயதான கண்ணகி உட்பட பல பெண்களும் புகார் அளித்த நிலையில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதே போன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராகவன் மீது ஒரு பெண் புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் அந்த பெண் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே அமமுக மாவட்ட செயலாளர் ராகவன் தனது கட்சியில் உள்ள பெண்களை மட்டுமே குறி வைத்து தொடர்ந்து ஏமாற்றி வருவதாகவும் இவரின் மோசடியால் பல பெண்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு சென்றுள்ளார் என அமமுக பெண் நிர்வாகி ராணி தெரிவித்தார். மேலும் மாவட்ட செயலாளர் தன்னிடம் பண மோசடி செய்தது போன்று எத்தனை பெண்களை ஏமாற்றியுள்ளார் என மாவட்ட காவல்துறை தீவிர விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் மோசடி செய்யும் நபர் அமமுகவிற்கு தேவையா என்பதையும் அமமுக தலைமை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் பண மோசடி குறித்து அமமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மீது அதே கட்சியை சேர்ந்த பல பெண்கள் புகார் அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News