குமரியில் சூரிய உதய காட்சிகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரியில் 60 நாட்களுக்கு பின்னர் சூரிய உதய காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

Update: 2021-07-05 11:00 GMT

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு தினமும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.

அதன்படி வரும் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்த்து ரசிப்பதோடு அங்கு அமைந்துள்ள கடற்கரை பகுதிகள், குமரி பகவதி அம்மன் கோவில், பூங்காக்கள் மற்றும் இயற்கை காட்சிகளை ரசித்து செல்வர்.

சபரிமலை சீசன் மற்றும் கோடை விடுமுறை காலங்களில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்லவும் பார்வையிடவும் அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா ஊராடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சுமார் 60 நாட்களுக்கு பின் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் சூரிய உதய காட்சிகளை கண்டு ரசித்தனர், அங்கு அமைந்துள்ள குமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News