குமரி சுற்றுலாத் தளங்கள், திருவள்ளுவர் சிலையை ஆய்வு செய்த அமைச்சர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தளங்கள், திருவள்ளுவர் சிலையை தமிழக சுற்றுலா துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.

Update: 2021-07-30 14:30 GMT

சுற்றுலாத்தளங்களை ஆய்வு செய்த அமைச்சர் மதிவேந்தன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். இன்று காலை கடல் நடுவே அமைந்துள்ள ஐயன் திருவள்ளுவர் சிலையை அவர் ஆய்வு செய்தார்.

மேலும், 133 அடி உயரத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை சுற்றி பார்த்த சுற்றுலாத்துறை அமைச்சர், சுற்றுலா பயணிகள் தங்குதடையின்றி வந்து செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும் திருவள்ளுவர் சிலையை அரசு முறையாக பராமரிக்க முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதேபோன்று கன்னியாகுமரி, முட்டம், திற்பரப்பு, உட்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள சுற்றுலா தளங்களை அமைச்சர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், அரசு அதிகாரிகள், உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News