குமரியில் கும்பம், முளைப்பாரியுடன் நடைபெற்ற கோவில் திருவிழா

குமரியில் கும்பம், முளைப்பாரியுடன் நடைபெற்ற அம்மன் கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபட்டனர்.

Update: 2022-04-22 09:01 GMT

கன்னியாகுமரி பத்ரகாளியம்மன் விழாவில் பெண்கள் முளைப்பாரி, கும்பம் எடுத்து வந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவிற்கு உட்பட்ட செண்பகராமன்புதூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா நடைப்பெற்று வருகிறது.

பரம்பரை பரம்பரையாக அனைத்து சமூகத்தினரும் சேர்ந்து நடத்தும் இந்த திருவிழாவில் பாரம்பரிய முறைப்படி பத்ரகாளி அம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் வீதி உலா வந்தனர்.

அப்போது நேர்த்திக்கடனாக முளைப்பாரி, கும்ப நீர் எடுத்து வீதிகளில் ஊர்வலமாக வந்த பக்தர்கள் மீண்டும் கோயிலுக்கு வந்தனர். தொன்று தொட்டு நடைப்பெற்று வரும் இந்த திருவிழாவில் முளைப்பாரி எடுத்து வரும் வழிபாடு சிறப்பு வாய்ந்தது. இதில் பெண்கள் விரதமிருந்து நேர்த்திக்கடனாக கும்பம் மற்றும் முளைப்பாரியை தலையில் எடுத்து மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்தனர்.

இந்த சித்திரை திருவிழா வழிபாட்டை காண தோவாளை, ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், தாழக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News