சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆகஸ்ட் 16 ல் புஷ்பாபிஷேகம்

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆகஸ்ட் 16 புஷ்பாபிஷேகம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளது.

Update: 2021-08-14 13:15 GMT

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றாக அமைந்துள்ளது கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் அமைந்துள்ள தாணுமாலயன் சுவாமி கோவில். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் ஒன்றாக அமைந்துள்ள இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் கடைசி திங்கட்கிழமை கோவிலில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கும் புஷ்பாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான புஷ்பாபிஷேக விழா ஆகஸ்ட் 16 ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெறுகிறது, அன்று மாலை கோவிலில் நடைபெறும் நித்திய காரிய பூஜைகள் முடிந்த பின் புஷ்பாபிஷேகம் நடைபெறும். தட்சணாமூர்த்தி, கொன்றையடி, தாணுமாலய சன்னதி, திருவேங்கட விண்ணவரம் பெருமாள், நவக்கிரக மண்டபம், கைலாசநாதர் , சாஸ்தா ராமர் சன்னதி மற்றும் 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் உட்பட அனைத்து சுவாமிகளுக்கும் புஷ்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த தகவலை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில் இதற்கான முன் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News