சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சித்திரை கனி காணும் நிகழ்ச்சி

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சித்திரை கனி காணும் நிகழ்ச்சி கேரளா ஐதீக முறைப்படி நடைபெற்றது.

Update: 2022-04-15 11:45 GMT

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சித்திரை கனி காணும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ் புத்தாண்டு சித்திரை விஷூ கனி காணும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மேலும் தமிழகம் முழுவதும் சித்திரை விசு கனி காணும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் இன்று கேரள முறைபடி சித்தரை விஷூ கனி காணும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். குமரி மாவட்டம் கேரளாவுடன் இருந்த காலந்தொட்டு இந்த சித்திரை கனி காணும் நிகழ்ச்சி கேரள ஐதீகப்படி சுசீந்திரம் கோவிலில் நடைபெற்று வருகிறது. அதேபோல் இன்றும் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் கேரள முறைப்படி சித்திரைவிசு பூஜைக்கு காய் கனிகளால் சிவ பெருமானின் உருவம் உருவாக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. இதனை காண ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் சங்கம் சார்பில் பக்தர்களுக்கு காய்கனிகள் மற்றும் கைநீட்டம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News