பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கும் மாநில அரசிற்கு சம்பந்தம் இல்லை: அமைச்சர்

பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கும் மாநில அரசிற்கு சம்பந்தம் இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

Update: 2022-04-05 10:30 GMT

கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ்

கன்னியாகுமரி, கோவளம் பகுதியில் தூண்டில் வளைவு அடிக்கல் நாட்டுவிழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிமவளங்கள் அனுப்பப்படுவது இல்லை. குமரி மாவட்டத்தில் 7 குவாரிகள் செயல்பட்டு வந்தாலும் இங்கிருந்து எடுக்கப்படும் கற்கள் அனைத்தும் குமரி மாவட்ட வளர்ச்சி பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. மத்திய அரசு கடுமையான நிதி நெருக்கடியை தர வாய்ப்புள்ளதால், மத்திய அரசின் வழிகாட்டுதல்படி வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது.

வரி உயர்வது, விலைவாசி உயர்வது தவிர்க்க முடியாத ஒன்று, பொதுமக்களுக்கு பாதிக்காத வகையில், வண்டு பூவில் இருந்து தேன் எடுப்பது போல் எளிதாக வரி வசூல் செய்யப்பட உள்ளது.

தமிழக ஆளுநர் தமிழக அரசிற்கு எதிராக, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உரிய நேரத்தில் ஒப்புதல் தராமல் இருக்கிறார். ஆனால் இலங்கை பிரச்சினைகளை எடுத்து செல்லாமல் இருப்பது மத்திய அரசின் தவறு, இலங்கையில் பிரச்சினை ஏற்பட்டால் இங்கு அதன் பாதிப்பு ஏற்படுமா என மத்திய அரசு கண்காணிக்க வேண்டும்.

பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கு மாநில அரசிற்கு சம்பந்தம் இல்லை, மத்திய அரசை சொல்வதற்கு அதிமுகவிற்கு தைரியம் இல்லை, சொல்லவும் மாட்டார்கள். பல்கலை கழகங்களுக்கு நுழைவு தேர்வுகளை மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் கூறுகிறார், இது மத்திய அரசு கொண்டுவரும் திட்டம் என்று அவருக்கு தெரியாதா என கூறினார்.

Tags:    

Similar News