காட்டுயானை தாக்கி உயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

காட்டு யானை தாக்கி பலியான கல்லூரி மாணவி குடும்பத்துக்கு உடனடியாக நிவாரணம் வழங்க சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் கோரிக்கை.

Update: 2021-10-29 15:00 GMT

காட்டு யானை தாக்கி பலியான கல்லூரி மாணவி குடும்பத்துக்கு உடனடியாக நிவாரணம் வழங்க சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் காேரிக்கை மனு அளித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் மாராமலை பகுதியில் உள்ள மலை பாதை சாலையில் கோவை வேளாண்மை கல்லூரி மாணவியான ஸ்ரீநா தனது தந்தையுடன் கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது மலை பாதை சாலையின் குறுக்கே நின்று கொண்டு இருந்த ஒற்றை காட்டு யானை தந்தை மற்றும் மகளை தாக்கியது.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஸ்ரீநா சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார். அவரின் தந்தை இரு கால்களும் செயல் இழந்த நிலையில் வீடு திரும்பினார். இச்சம்பவத்தில் உயிர் இழந்த ஸ்ரீநாவின் குடும்பத்திற்கு அரசு நான்கு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தது. இந்நிலையில் அந்த நிவாரண தொகை இது வரை அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் மாவட்ட வன அதிகாரியை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக மாநில கழக அமைப்பு செயலாளருமான தளவாய் சுந்தரம் சந்தித்தார்.

அப்போது யானை தாக்கி பலியான விவசாய கல்லூரி மாணவி ஸ்ரீநாவின் குடும்பத்திற்கு அரசின் 4 லட்சம் நிதி உதவியையும் மற்றும் பலத்த காயம் அடைந்த அவரது தந்தையின் வாழ்வாதாரத்திற்கு தேவையான நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மனு அளித்தார்.

Tags:    

Similar News