குமரியில் 2.0 ஆப்ரேஷன் விழிப்புணர்வு பேரணி - காவல்துறை ஏற்பாடு

குமரியில் 2.0 ஆப்ரேஷன் தொடங்கிய நிலையில் விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக காவல்துறை சார்பில் பேரணி நடைபெற்றது.

Update: 2022-04-02 05:30 GMT

விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற ஆட்டோக்கள். 

தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் போதை பொருளை ஒழிக்க டிஜிபி சைலேந்திரபாபு கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில் ஒரு மாதம் ஆப்ரேஷன் நடத்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.

அதன்படி மாவட்டம் தோறும் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் போதையில்லா மாவட்டமாக குமரி மாவட்டத்தை மாற்றும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

இதனை மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், சமூகநல துறை அதிகாரி சரோஜினி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தகவல் தொலைபேசி எண் கொண்ட விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட ஆட்டோக்கள் நகரின் முக்கிய பகுதிகளில் வலம் வந்து ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தது. இதில் ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தன்னார்வலர்கள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News