108 புதிய ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம் - அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

குமரியில், 108 புதிய ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

Update: 2022-03-08 12:00 GMT

மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில், ஆம்புலன்ஸ் சேவையை  அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

உயிர்காக்கும் சேவையாக,  தமிழகத்தில் சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல வாழ்வு துறை சார்பில் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டு, ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே 15-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில்,  கூடுதல் ஆம்புலன்ஸ் சேவையை ஏற்படுத்த மாவட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறையின் சார்பில் உயிர்காக்கும் புதிய 108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்க நிகழ்ச்சி, இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் புதிய ஆம்புலன்ஸ் சேவையினை தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News