மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பது மக்களுக்கு எதிரான செயல் : தளவாய்சுந்தரம்

நாகர்கோவில் மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பது மக்களுக்கு எதிரான செயல் என்று எம்.எல்.ஏ தளவாய்சுந்தரம் குற்றம் சாட்டினார்.

Update: 2021-09-11 15:00 GMT

குமரியில் தாளவாய் சுந்தரம் பேட்டி அளித்தார்.

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியின் அதிமுக எம்எல்ஏ தளவாய்சுந்தரம், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியின் பாஜக எம்எல்ஏ எம்.ஆர் காந்தி ஆகிய இருவரும் இன்று கூட்டாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ தளவாய்சுந்தரம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ஏற்கனவே 15 தினங்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வரும் நிலையில் தற்போது மாநகராட்சி என்ற பெயரில் கூடுதலாக பல ஊராட்சிகளை இணைக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

இதனால் மாநகராட்சியில் புதிதாக இணையும் பகுதிகளுக்கு குடிநீர் பிரச்சனை ஏற்படும் எனவே இதனை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். ஊராட்சி பகுதிகளில் மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு திட்டத்தால் பலர் பயன்பட்டு வரும் நிலையில் பல ஊராட்சிகளில் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு இழப்பு ஏற்படும்.

இதே போன்று மண்பாண்ட தொழிலாளர்கள் செங்கல் சூளைகளில் இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர் அவர்களுக்கு குளங்களில் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்.

சமீப நாட்களாக இதுபோன்று மண் எடுக்க அதிகாரிகள் கெடுபிடி செய்வதால் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனவே இதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News