அதிமுக அரசின் அனைத்து திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டன - தளவாய் சுந்தரம் குற்றச்சாட்டு

அதிமுக அரசின் அனைத்து திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டு இருப்பதாக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் குற்றச்சாட்டினார்.

Update: 2022-01-02 14:30 GMT

சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம்

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிமுக மாநில கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் கூறியதாவது: 

அதிமுக அரசால் மக்களுக்கு எது தேவை என கண்டறிந்து ஏழை எளிய மக்களுக்காக கொண்டுவரப்பட்ட அனைத்து திட்டங்களையும் விடியல் விடியல் என கூறி விடியாமல் போன அரசான திமுக அரசு கிடப்பில் போட்டு முடக்கி விட்டதாக குற்றம் சாட்டினார்.

குறிப்பாக பொங்கல் ரொக்க பரிசு, தாலிக்கு தங்கம், உழைக்கும் பெண்களுக்கான இருசக்கர வாகனம் உட்பட அனைத்து திட்டங்களும் முடங்கி உள்ளதாக தெரிவித்தார். மேலும் ஒரு கிராமத்தில் இருக்கும் மினி கிளினிக்கால் என்ன பயன் என்பது அந்த மினி கிளினிக் இருக்கும் கிராம மக்களுக்கு நன்றாக தெரியும். மினி கிளினிக்கால் கர்ப்பிணி பெண்கள், வயதான முதியவர்கள் பெரிதும் பயன்பெற்று வந்த நிலையில் வீடு தேடி மருத்துவம் என்ற செயலற்ற திட்டத்தை கொண்டு வந்து மக்களுக்கு நன்மை செய்வது போன்று மாயையை உருவாக்கும் திமுக அரசு மினி கிளினிக்கையும் மூடி வரும் திமுக அரசு மக்களை வஞ்சிப்பதாக தெரிவித்தார். மேலும் ஆட்சி பொறுப்பேற்று 8 மாதங்கள் கடந்த நிலையில் இந்த அரசால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை என தெரிவித்தார்.

Tags:    

Similar News