நாகர்கோவிலில் அனைத்து இந்திய சட்ட உரிமைகள் கழக ஆலோசனைக் கூட்டம்

இந்திய சட்ட உரிமைகள் கழகத்தின் பெயரில் பணம் வசூல் நடைபெறும் நிலையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2022-03-01 11:30 GMT

அனைத்து இந்திய சட்ட உரிமைகள் கழக நிர்வாகிகள், செய்தியாளர்களை சந்தித்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அனைத்து இந்திய சட்ட உரிமைகள் கழகத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் இன்று நாகர்கோவிலில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் இணைந்து தங்களின் அனைத்து இந்திய சட்ட உரிமைகள் கழகத்தின் பெயரை பயன்படுத்தி வசூலிக்கும் போலி கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கூறியதாவது:  கொரோனா காலகட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் சேவையாற்றி வருவதாகவும், ஏழை எளியோருக்கு நலத்திட்டங்களை வழங்கி உதவி புரிந்து வருவதாகவும் தங்களின் அனைத்து இந்திய சட்ட உரிமைகள் கழகம் அனைத்து தரப்பு மக்களுக்கு உதவி செய்து வருகிறோம்.

எனினும், அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் எங்களது கழகத்தின் பெயரை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலும் சிலர் ஈடுபட்டு வருவதை தடுக்கும் விதமாக காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளோம். மேலும் தங்களின் அனைத்து இந்திய சட்ட உரிமைகள் கழகத்தின் பெயரை பயன்படுத்தி பணம் வசூலித்தால் பொதுமக்கள் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என, இக்கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

Tags:    

Similar News